உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரால்ட் லார்வூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரால்ட் லார்வூட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹரால்ட் லார்வூட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 225)சூன் 26 1926 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 28 1933 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 21 361
ஓட்டங்கள் 485 7,290
மட்டையாட்ட சராசரி 19.40 19.91
100கள்/50கள் 0/2 3/25
அதியுயர் ஓட்டம் 98 102 not out
வீசிய பந்துகள் 4,969 58,027
வீழ்த்தல்கள் 78 1,427
பந்துவீச்சு சராசரி 28.35 17.51
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 98
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 20
சிறந்த பந்துவீச்சு 6/32 9/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/– 234/–
மூலம்: [1], சனவரி 8 2009

ஹரால்ட் லார்வூட் (Harold Larwood, பிறப்பு: நவம்பர் 14 1904, இறப்பு: சூலை 22 1995) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 485 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ஓட்டம் 98 ஆகும்.பந்துவீச்சில் 78 இழப்புகளைக் கைப்பற்றினார். 361 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு 7280 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்தது அதிகப்ட்ச ஓட்டம் ஆகும்.பந்துவீச்சில் 1427 இழப்புகளைக் கைப்பற்றினார். இவர் 1926 - 1933 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

நிலக்கரிச் சுரங்க நகரமான கிர்க்பி-இன்-ஆஷ்பீல்டிற்கு அருகிலுள்ள நூன்கர்கேட் என்ற நோட்டிங்ஹாம்ஷிர் கிராமத்தில் 1904 நவம்பர் 14 ஆம் தேதி ஹரோல்ட் லார்வுட் பிறந்தார். [1] சுரங்கத் தொழிலாளியான ராபர்ட் லார்வுட் மற்றும் இவரது மனைவி மேரி, ஷர்மன் ஆகியோருக்கு பிறந்த ஐந்து மகன்களில் இவர் நான்காவது ஆவார். [1] ராபர்ட் கடுமையான கொள்கைகளைக் கொண்ட மனிதர், உள்ளூர் மெதடிஸ்ட் தேவாலயத்தின் பொருளாளராக இருந்த ஒரு ஒழுக்க சீலர் ஆவார். இவர் தலைமை வகித்த கிராமத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். ஹரோல்ட் லார்வூட்டின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டங்கன் ஹாமில்டன் எழுதுகிறார்,"கடவுளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ்வதே இவரின் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமாக இருந்தது" எனத் தெரிவித்தார்.[2]

ஐந்து வயதிலிருந்தே, ஹரோல்ட் கிர்க்பி உட்ஹவுஸ் பள்ளியில் பயின்றார். பல ஆண்டுகளாக இந்த சிறிய கிராமப் பள்ளி, லார்வூட்டைத் தவிர, நாட்டிங்ஹாம்ஷைர் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தில் இருந்து இவரது சமகாலத்தவர்களாக மாறிய நான்கு சர்வதேச துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியது: வில்லியம் "டாட்ஜ்" வைசால், சாம் ஸ்டேபிள்ஸ், பில் வோஸ் மற்றும் ஜோ ஹார்ட்ஸ்டாஃப் ஜூனியர் . [3] 1917 ஆம் ஆண்டில் பள்ளியை விட்டு இவர் 13 ஆம் வயதில் வெளியேறிய பிறகு, ஹரோல்ட் உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்களின் கூட்டுறவு கடையில் பணிபுரிந்தார். [4] இவர் துடுப்பாட்டத்திற்கான ஆரம்பகால திறமையைக் கொண்டிருந்தார்., மேலும் 1918 ஆம் ஆண்டில் நுன்கர்கேட்டின் இரண்டாவது அணிக்காக விளையாடத் தொடங்கினார். அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களுக்கு எதிராக விளையாடி, தனது முதல் ஆண்டில் சராசரியாக 4.9 எனும் பந்துவீச்சு சராசரியோடு 76 இழப்புகளை வீழ்த்தினார். 1920 ஆம் ஆண்டில், இவர் முதல் அணியில், தனது தந்தையுடன், பிளிம்சால்ஸில் விளையாடினார்.[5]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]

லார்வுட் 1926 ஆம் ஆண்டில் மாவட்ட துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.சர்ரே துடுப்பாட்ட அணிக்கு எதிரான சமமான போட்டியின் போது, அவர் இங்கிலாந்தின் முதன்மை மட்டையாளர் மற்றும் தேசிய தேர்வாளர்களுடன் செல்வாக்கு உள்ளவரான ஜாக் ஹோப்ஸின் இழப்பினை இரண்டு முறை எடுத்தார். ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இவர் இடம்பெற்றார். மேலும் அப்போது இங்கிலாந்தின் தலைவராக கார் நியமிக்கப்பட்டார். [6] லார்வுட் தனது நாட்டிற்காக விளையாடுவதற்கு போதுமானவர் என்று ஹோப்ஸ் உறுதியாக நம்பினார்; [7] ஜூன் மாத தொடக்கத்தில் லார்ட்ஸில் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது இவர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் போட்டியில் இளம் பந்து வீச்சாளரை சேர்க்க இந்த பரிந்துரை தூண்டப்பட்டிருக்கலாம். இந்த போட்டியில் லார்வுட் ஐந்து இழப்புகளை வீழ்த்தினார், [8] ஆனால் இவர் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. [9] இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்திற்கு , ஜூன் 26 அன்று லார்ட்ஸில் தொடங்கவிருந்ததால், தேர்வாளர்கள் இளைஞரான லார்வூட்டைத் தேர்ந்தெடுத்தனர்.[10]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Wynne-Thomas, Peter (January 2011). "Larwood, Harold". Oxford Dictionary of National Biography Online edition. பார்க்கப்பட்ட நாள் 9 October 2012.
  2. Hamilton, pp. 50–54
  3. Hamilton, pp. 50–54
  4. . 
  5. Hamilton, pp. 71–72
  6. {{cite book}}: Empty citation (help)
  7. Hamilton. pp. 69–70
  8. "Test Trial 1926". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 October 2012.
  9. Swanton, p. 29
  10. Hamilton, pp. 71–72
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரால்ட்_லார்வூட்&oldid=3007066" இலிருந்து மீள்விக்கப்பட்டது